விழுப்புரம்,ஜூன்.12:  கோட்டக்குப்பம் அருகே 2 நண்பர் களுடன் அண்ணன், தம்பியை உயிரு டன் எரித்துக்கொல்ல முயன்ற கும்பல், அ.தி.மு.க. நகர செயலாளரின் கார், ஆட்டோவுக்கும் தீவைத்து விட்டு தப்பி ஓடியது.

கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் கணேசன் (வயது45). இவருடைய வீடு சின்ன முதலியார்சாவடியில் உள்ளது. இவருடைய தம்பி அசோகனுக்கும். மகன் சிவாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. தீஷ் தலைமையிலான கும்பல் அசோகனின் உறவினர் பாலா என்பவரின் ஆட்டோவுக்கு தீ வைத்தது. இதில் அந்த ஆட்டோ எரிந்து சேதமடைந்தது.