சுற்றுலா தலமாக மாறிய உலகின் மிக உயரமான அஞ்சலகம்

உலகம்

சிம்லா, ஜூன் 12: இந்தியாவில் மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள அஞ்சலகம் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ள அஞ்சலகம் தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் பெருமையை பெற்றுள்ளது.இதை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.