வேலூர்,ஜூன் 12: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் விஐடி வேந்தர். ஜி.விசுவநாதன் பேசினார். வேலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வி ஐ டி சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் வி ஐ டி வேந்தர் டாக்டர். ஜி. விசுவநாதன் பங்கேற்று பேசியதாவது:- வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. வி ஐ டி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் முற்றிலும் கட்டணம் ஏதுமின்றி கல்வி பயில்கிறார்கள் .தற்போது இந்த மாணவர்கள் அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க போதிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர வேண்டும். 4 ஆண்டு பயிற்சிக்கு பிறகு தான் ஆசிரியர் ஆக முடியும் என கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் காலம் தவறாமை எங்கு இருக்கிறதோ அங்கு தானாகவே கல்வி உயர்ந்து விடும்.

மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படிக்க வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் என்றார்.
வி ஐ டி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த போதிய வசதிகளை செய்து தருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வியில் வேலூர் மாவட்டத்தை முதன்மையாக ஆசிரியர்கள் தாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல் பட வேண்டும் எனக் கூறினார்.

விழாவில் வி ஐ டி இணைத் துணை வேந்தர் டாக்டர். எஸ். நாராயணன் வரவேற்பரை வழங்கினார். சி.எஸ்.ஆர். டி – ஆர்.எஸ் முனைவர் சி.ஆர். சுந்தரராஜன் நன்றி கூறினார்.