தல 60’ படத்திற்காக கெட்டப் மாறிய அஜித்

சினிமா

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித், தனது அடுத்த படமான ‘தல 60’ படத்திற்கு தயாராகிவிட்டார்.

சமீபத்தில் அஜித் தனது மேனேஜர் வீட்டிற்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் ஷேவ் செய்து, தலையிலும் வெகுவாக முடியை குறைத்துள்ளார். எனவே ‘விஸ்வாசம்‘, நேர் கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படங்க்ளில் பார்த்த தாடி கெட்டப் ‘தல 60’ படத்தில் இருக்காது என்றும், இந்த படத்தில் அவரது லுக் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ‘தல 60’ திரைப்படம் பைக் ரேஸ் குறித்த கதை என்று செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவருடைய புதிய கெட்டப் குறித்தும் தகவல் வெளியாக¤ உள்ளது குறிப்பிடத்தக்கது.

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோயம்பேட்டில் உள்ள ரோஹிணி தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படத்தை விடிய விடிய திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.