சென்னை, ஜூன் 13: வரும் 16ந் தேதி தமாகா மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் தமாகா தலைவர் ஜிகே. வாசன் தலைமையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமாகா நேர்முகச்செயலாளர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:-
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் வரும் 16ந் தேதி சென்னை தி.நகரில், திருமலைபிள்ளை ரோட்டில் உள்ள குவாலிட்டி இன் சபரி – ஹோட்டலில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இயக்கத்தை பலப்படுத்துவது பற்றியும், நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.  குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாவட்டம் தோறும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள த.மா.கா வினர் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தையும் மற்றும் மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.