சென்னை, ஜூன் 13: கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் இருவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கோட்டை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நேற்றிரவு 2 பேர் நின்றுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ராயபுரத்தை சேர்ந்த கனீஷ் என்பவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்தனர்.

இதனை கவனித்த ரோந்து பணியில் இருந்த கோட்டை போலீசார் அந்த நபர்களை மடக்கிபிடித்து கைது செய்தனர்.  அவர்கள், போரூரை சேர்ந்த ஆகாஷ், சைதாப்பேட்டை சேர்ந்த கோபிநாத் என்பது விசாரணையில் தெரியவந்தது.