செங்குன்றம், ஜூன் 13: செங்குன்றம் அருகே நாரவாரிக்குப்பத்தில் வசித்து வருபவர் சுலோச்சனா (வயது 70) இவர் தனியாக வசித்துவருகிறார். நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரோக்கியசாமி (வயது43) போதையில் வந்து மூதாட்டியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மூதாட்டியின் அலறல்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்து ஆரோக்கியசாமி தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து வரப்பட்ட புகார் தொடர்பாக செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தலைமறைவான ஆரோக்கியசாமியை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.