குழந்தை தொழிலாளர் முறை அகற்ற உறுதிமொழிஏற்பு

தமிழ்நாடு

சிதம்பரம், ஜூன் 13: சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக பதிவாளர்(பொ) பேராசிரியர் முனைவர் கிருஷ்னமோகன் உறுதிமொழி வாசிக்க, ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் மொழியியல் புல முதல்வர் பேராசிரியர் முனைவர் திருவள்ளுவன், பல்வேறு புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.