சென்னை, ஜூன் 13: மக்களவை தேர்தலில் தமிழகத்தை போல்தேசிய அளவில் கூட்டணி அமையவில்லை என்றும் தேர்தலுக்காக பிஜேபி ரூ.27,000 கோடி செலவு செய்துள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியா முழுவதிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிஜேபி ரூ.27,000 கோடியை தேர்தலுக்காக மட்டும் செலவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதலை பெரிதுபடுத்தி பிஜேபி பெருமை தேடிக் கொண்டது.

எனினும், மதச்சார்பற்றற கூட்டணிக்கும், மத அடிப்படைவாதிகளுக்குமான போட்டியாகக் கடந்த மக்களவைத் தேர்தல் இருந்தது. தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி இணைந்ததுபோல் இந்திய அளவில் இணையவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை என்பதை தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை என்றார் அவர்.