செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்’ சார்பில் தயாரிக்கும் படம் ‘மாயபிம்பம்‘. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போல தற்போது உருவாகியுள்ள படம் ‘மாயபிம்பம்‘. இதில் ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள்.

கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘ நந்தா இசையமைக்க, வினோத் சிவகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மார்ட்டின் தீட்ஸ்க கலையமைக்கிறார் இதை உலகமெங்கும் விடி சினிமாஸ் வெளியிடுகிறது.

இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.

இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.