சென்னை, ஜூன் 14: பாண்டிபஜார் தலைமை காவலர் கார்த்திகேயன், நேற்றிரவு வள்ளுவர் கோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, 4 பேர் காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், போலீஸ் கார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அப்சார் (வயது 35), ரிஸ்வான், சுலைமான் (வயது 32), நவ்ஷத் (வயது 32) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.