சென்னை, ஜூன் 14: திருவள்ளுர் மாவட்டத்தில் ரூ.205 லட்சத்தில் கட்டப்பட்ட திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தினை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைபத்த முதல்வருக்கு கலெக்டர் நன்றி தெரிவித்துள்வளர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த. திருவள்ளுர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுலவக பெருந்திட்ட வளாகத்தில் கட்ட உத்தேசிக்கப்பட்டு ரூ.205 லட்சம் திட்டத்திற்கு வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு, ரூ. 40 லட்சம் வாரிய வரம்பிலும் ரூ. 165 லட்சம் பொதுப்பணித்துறை மூலமும் கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இக்கட்டிடத்தின் தரைதளத்தில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் ஓய்வு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, மின் தூக்கி வசதியும் அமைக்கப் பட்டுள்ளது. முதல் தளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அறை, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அறை, 2 உதவி பொறியாளர் அறை, அலுவலக அறை, ஆண்- பெண் இரு பாலருக்கும் தனித்தனி கழிவறை, எழுது பொருட்கள் அறையும் அமைக்கப்பட்டுள்ளது, இரண்டாம் தளத்தில் ஆய்வுக் கூடம்;, கூட்ட அரங்கம், பதிவு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கணொலி மூலம் திறந்து வைத்தார்.முதலமைச்சருக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.