சவுத்தாம்டன், ஜூன் 14: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் விண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, வெ.இண்டீஸ் (விண்டீஸ்) அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் களம்கண்டனர். இவர்களில் எவின் லீவிஸ் 2 ரன் அடித்த நிலையில், 2.6-வது ஓவரில் அவுட் ஆகி வந்த வேகத்தில் நடையைக்கட்டினார்.