சென்னை, ஜூன் 14: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. அந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி எதிர்த்து போட்டியிடுகிறது.

இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணியினர் நேற்று நடிகர் விஜயகாந்தை சந்தித்து பேசிய நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினர்.