சென்னை, ஜூன் 14: சென்னை அசோக் பில்லர் அருகே இன்று காலை 6.30 மணியளவில் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி தூக்கிவீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர், திருச்சியை சேர்ந்த சின்னராசு (வயது 60) என்பதும், சென்னைக்கு வந்து செக்யூரிட்டி வேலை செய்து, வேலை பிடிக்கவில்லை எனக்கூறி ஊருக்கு செல்ல புறப்பட்டபோது, விபத்து நேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.