சென்னை, ஜூன் 14: திநகர் விடுதியில் தங்கி ராசி கற்கள் விற்பவர்கள் முகத்தில் மிளகாய்பொடி தூவி ராசி கற்களை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.மேலும்த ப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தி.நகரில் உள்ள ஒரு விடுதியில் நவரத்தினம் மற்றும் ராசிக்கற்கள் விற்பனை செய்யும் தேனியைச்சேர்ந்த செல்வம் (வயது43), ரவிக்குமார் (வயது40) ஆகியோர் தங்கியிருந்தனர்.  அப்போது 4பேர் கொண்ட கும்பல்ஒன்றுமொத்தமாக ராசி கற்கள் வாங்கவேண்டும் என்ற கூறி கற்களை பார்த்துக்கொண்டிருந்தது.

அப்போது கும்பல் வைத்திருந்த மிளகாய் பொடியை ரவிக்குமார், செல்வம் மீது வீசி விட்டு அவர்கள் வைத்திருந்த ராசி கற்களை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது சுதாரித்து கொண்ட அவர்கள் அவர்களை துரத்திசென்று மேலுரைச்சேர்ந்த பாஸ்கர்(வயது30) என்பவரை கைது செய்தனர்.மேலும்தப்பி ஓடியவர்கள்குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தி நகர் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.