தாம்பரம், ஜூன் 14: சிகிச்சையின் போது நோயாளிகள் இறக்கவோ மற்றும் சில காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தாம்பரத்தில் 100க்கும்மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்கள், பணியின்போது நோயாளிகள் அல்லதுஅவர்களின் உறவினர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கண்டித்து வருவதுடன் இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எதிர்ப்பு தினத்தையொட்டி தாம்பரம் கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தாம்பரத்தில் உள்ள குமரன் மருத்துவமனை முன்பாக 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும்பங்கேற்றனர்.இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.