புதுடெல்லி,ஜூன் 14:           13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி நடைபெற்றது.
இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

மேலும் விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தைச்சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவந்துள்ளது.

இவர் கோவையைச்சேர்ந்த வினோத் ஹரிகரன் கடந்த 2011 முதல் விமான படையில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இ