புதுடெல்லி, ஜூன் 14: சாகித்திய அகாடமியின் 2019 ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகாடமி சார்பில் ஒவ்வொரு வருடமும் 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு “யுவ புரஸ்கார் விருதும்,சிறுவர் இலக்கியத்திற்காக “பால
யுவ புரஸ்கார்’ விருதும் வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் “வால்’என்ற கவிதை தொகுப்பிற்காக கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதத்தில்,தேவி நாச்சியப்பனுக்கு “பால யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவி நாச்சியப்பன், குழந்தைகள் கவிஞர்.அழ.வள்ளியப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகித்திய அகாடமியின் இந்த ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது 23 எழுத்தாளர்களுக்கும், பால யுவ புரஸ்கார் விருது 22 இளம் எழுத்தாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புரஸ்கார் விருதுகள் தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது.