மான்செஸ்டர், ஜூன் 15: அனைவரின் எதிர்பார்ப்புகளையும் சுமந்தபடி இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் நாளைய உலகக்கோப்பை போட்டியில் களம்காண உள்ளனர்.
மான்செஸ்டர் நகர மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் சக்தி, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி, இருவேறு நாட்டு மக்களின் உணர்வுகளும் இதில் பிரதிபலிக்கும்.

டெஸ்ட், ஒருநாள் வரலாற்றில் பாகிஸ்தானின் கொடியே பறந்தாலும், உலகக்கோப்பை போட்டியை பொறுத்தமட்டில் இதுவரை இந்தியாவே ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதுவும், இந்திய அணி 6-0 என்ற கணக்கில் சாதனை புரிந்துள்ளது. இதே சாதனையை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி நாளை களம் காண்கிறது.