குஜராத், ஜூன்15:  குஜராத் மாநிலத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இன்று காலை அந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.