சென்னை, ஜூன் 15: பெண் போலீசாருக்காக நடந்த திறன்மேம்பாடு பயிற்சி வகுப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று காலை நடந்த இந்த பயிற்சி வகுப்பினை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ,கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

பயிற்சியின்போது, பெண் போலீசாரின் ஆலோசனை வழங்கும் திறனை மேம்படுத்துதல் தொடர்பாக அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் விமலா வரவேற்புரையும், இணை கமிஷனர் ஜெய கௌரி நன்றி உரையும் கூறினர்.

சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 200 பெண் போலீசார் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.