சென்னை, ஜூன் 15: வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த தம்பதியர் சங்கர்-நித்யா. இவர்களுக்கு அஸ்வினி (வயது 7), தனுஷ் (வயது 4) என்ற குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவிவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனமுடைந்த நித்யா, தனது மகள் மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். சங்கர் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, நித்யா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.