புதுடெல்லி, ஏப்.10:திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தலாய் லாமாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 83-வயதான தலாய் லாமா, மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி வந்தார்.

டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மக்ஸ் மருத்துவமனையில் உடல் நல பரிசோதனையை மேற்கொண்டார். மருத்துவமனையில் தலாய்லாமா அனுமதிக்கப்பட்டாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்பதற்காக தலாய்லாமா டெல்லி வந்து இருந்தார். சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு 14-வது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.