திருத்தணி ஜூன் 16: திருத்தணியில் தண்ணீர் பிரச்சணைக்கு நிரந்தரதீர்வு காணும் விதத்தில் நல்ல தண்ணீர் குளம் சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நரசிம்மன் எம்எல்ஏ பார்வையிட்டார்.

திருத்தணி காந்திரோடு பகுதியில் அமைந்துள்ளது நல்ல தண்ணீர் குளம், தற்போது இந்த வறண்டடுள்ளது. திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு துறை சார்பாக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் முறையாக டெண்டர் விடப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

குளத்தை ஆழப்படுத்தி குளக்கரை சுற்றிலும் அழகுபடுத்தி சுற்றுச்சுவர் எழுப்பி பூங்காக்கள் வண்ண விளக்குகள் பொருத்தி நடை பயிற்சி பாதை அமைத்து பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குளத்தின் மையப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் கிடைக்கிற தண்ணீரை நிரந்தரமாக சேமித்து வைத்து தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கப்பெறுகிற அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.