சென்னை, ஜூன் 16: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று பகல் 70 வயது முதியவர் ஒருவர் வந்தார். வெளியூர் செல்லும் பேரூந்தில் ஏறுவதற்காக காத்திருந்த அவர், திடிரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு பேரூந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் சீதாபதி (வயது 70) என்பதும் கோயம்பேடு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.