பாட்னா, ஜூன் 16: பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்களோ, முறையான ஏற்பாடுகளோ இல்லை என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பீகார், முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை இந்த நோய் தாக்கியது. அதிலிருந்து இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு முதலில் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை குழந்தைகளின் பலி எண்ணிக்கை, 111 ஐ தொட்டுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.