விஜய் சேதுபதி ஐஸ்வர்யா நடிக்கும் க/பெ ரணசிங்கம்

சினிமா

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ள படம் க/பெ ரணசிங்கம் இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.

அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொள்ள சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார்.  லால்குடி என் இளையராஜா கலை அமைக்க சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.

நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த தயாரிப்பாக விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் இயக்குனர் பி விருமாண்டி தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.