ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார்.

தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்சர்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், ‘சிக்சர்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம்.

‘நீ எங்கவேனா கோச்சிக்கினு…’ என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார். இந்த பாடல் மீது தற்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிக்சர் படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.

சாச்சி என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.