சென்னை, ஜூன் 16: தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரை குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்க முடிவெடுத்து இருப்பதாக அமைச்சர் எஸ்.பி, வேலுமணி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கோவையில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று கோவையில் அதிகாரிகளுடன¢ ஆய்வு செய்தார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிப்காட்டுக்கு விநியோகிக்கப¢பட்டு வரும் குடிநீர் இனி குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்படும். குடிநீர்¢ தட்டுப்பாட்டை போக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற வெளிநாட்டு வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் நிதியுதவி கேட்டிருக்கிறோம்.

2017-ல் ஏற்பட்டதைபோல் கடுமையான அளவுக்கு தற்போது பிரச்சினை உருவாகவில்லை. 2017-ல் சென்னையில் 7 ஆயிரம் முறை டேங்கர்கள் மூலம் சப்ளை செய்யப்பட்ட குடிநீர் இப்போது 9100 ஆயிரம் முறையாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.15838 கோடி செலவிட்டு இருக்கிறோம். சென்னையில் மட்டும் 4092 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இன்றைய எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது செய்ததைவிட அதிமுக அரசு குடிநீர் பிரச்சினை விஷயத்தில் அதிகமாக பணியாற்றி வருகிறது.

தற்போது 2400 எம்எல்டி தண்ணீர் விநியோகித்து வருகிறோம். இது திமுக காலத்தில் விநியோகித்ததை விட அதிகம் என்றார்.