சென்னை, ஜூன் 16: தந்தையர் தினம் கொண்டாடப் படுபவதையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமான கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடும் வகையில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தங்களது தந்தைகளுக்கு குழந்தைகள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்….

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என்று நான் வாழ்ந்ததாகச்

சொல்லுவார் தலைவர் கலைஞர்.

அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.

உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! ‘

#HappyFathersDay #MissUappa