சென்னை, ஜூன் 16: இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்துக்குள் ளானதில் கல்லூரி மாணவர் ஒருவர் உ.யிரிழந்தார்.

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் ரவி (வயது 20). இவர் பள்ளிகரணையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3 ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வந்தார். இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பெரும்பாக்கம் மெயின் ரோடு வழியாக சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சாந்திநகர் சந்திப்பு அருகே வந்தபோது பின்னால் வந்த சிமெண்ட கலவை லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாணவரின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், லாரி ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.