மதுரை,ஜூன் 16: மதுரை மகபூப்பாளையம் பகுதியில் குமார் என்பவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய முயன்ற குமாரின் மகன் பெத்துராஜ் என்பவர் மீது தீப்பற்றிக் கொண்டது.

இதனால் பெத்துராஜ்க்கு பலத்த காயமும் அவரது தாயாருக்கு மயக்கமும் ஏற்பட்டது. அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெத்துராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.