சென்னை ஜூன் 16: சென்னையில் குடிநீர் பற்றிய புகார்களை கையாளுபதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் இவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னைமாநகருக்குகுடிநீர் வழங்கப்படும் முறை குறித்து வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று 15.06.2019 சென்னைகுடிநீர் வாரியதலைமை அலுவலகத்தில்நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தினசரி குடிநீர் விநியோகமுறை குறித்தும் மற்றும் அன்றாடபுகார்களின் மீது எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தங்களின் புகார்களை கீழ்க்கண்ட சிறப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

வ.எண். கண்காணிப்பு பொறியாளர்களின் பெயர்கள் தொடர்பு கொள்ளும் எண் ஆய்வு செய்யும் பகுதி அலுவலகம் விவரம் வருமாறு  ஆர்.நெல்சன் எட்மண்ட், கண்காணிப்பு பொறியாளர் (வடக்கு) 8144931000 பகுதி – 1திருவொற்றியூர்
பி.பழனிவேலன்., கண்காணிப்பு பொறியாளர் 8144905905 பகுதி – 2 மணலி
ஆர்.நெல்சன் எட்மண்ட், கண்காணிப்பு பொறியாளர் 8144931000 பகுதி – 3 மாதவரம்
ஆர்.கந்தசாமி, கண்காணிப்பு பொறியாளர் (வடகிழக்கு) 8144945000 பகுதி – 4 தண்டையார்பேட்டை
பி.ராஜாராம், கண்காணிப்பு பொறியாளர் (க.நீ.சு&ம.ப)) 8144931010 பகுதி – 5 இராயபுரம்
எம்.ஜெயகர் ஜேசுதாஸ், கண்காணிப்பு பொறியாளர்8144902902 பகுதி – 6 திரு.வி.க.நகர்
டி.ஆர்.பார்த்தசாரதி, கண்காணிப்பு பொறியாளர்8144906906 பகுதி- 7 அம்பத்துலீர்
பி.ஜே.தேவராஜ், கண்காணிப்பு பொறியாளர்8144901901 பகுதி – 8 அண்ணாநகர்
வி.ஜி.ராமசாமி, கண்காணிப்பு பொறியாளர் (மத்திய) 8144934000 பகுதி – 9 தேனாம்பேட்டை
எ.மலைச்சாமி, இயக்குநர் (பயிற்சிநிலையம்) 8144904904 பகுதி – 10 கோடம்பாக்கம்
ஆர்.ஜெயராட்சகன், கண்காணிப்பு பொறியாளர் (திட்டம் மற்றும் வரைவு) 8144989000 பகுதி – 11 வளசரவாக்கம்
ஆர்.கண்ணன், கண்காணிப்பு பொறியாளர் 8144907907 பகுதி- 12 ஆலந்துலீர்
சமீலால் ஜான்சன், கண்காணிப்பு பொறியாளர் (தென் மேற்கு) 8144930999 பகுதி- 13 அடையாறு
ஆர்.நரசிம்மன், கண்காணிப்பு பொறியாளர் (தெற்கு) 8144923000 பகுதி – 14 பெருங்குடி
என்.ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர்(க.நீ.சு.தி) 8144930989 பகுதி – 15சோழிங்கநல்லுலீர் மக்கள்தொடர்பு மேலாளர் சென்னைகுடிநீர்