சென்னை, ஜூன்.16: சென்னை மாதவரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தண்டபாணி. இவர் செம்பியம் போக்குவரத்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 13 ம் தேதி குடும்பத்துடன் திருசெந்தூருக்கு சென்ற அவர் இன்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.