சென்னை, ஜூன் 17: வக்பு வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத்தலைவர் விஎம்எஸ். முஸ்தாபா கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் வக்பு வாரிய உருவாக்கப்பட்ட நாள் முதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அந்த உறுப்பினர்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை அமலில் இருந்து வருகிறது.

அதன்படி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வ க்பு வாரிய தலைவராக எம்பி அன்வர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்று 1 ஆண்டுகாலம் ஆகாத நிலையில், தற்போது காலவதியான தலைவராக அன்வர் ராஜா தொடர்ந்து வருகிறார். வக்பு வாரியத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், சமூக ஆர்வலர், முத்தவல்லிகள், வழக்கறிஞர்கள் என 11 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு. இவர்கள் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் எம்பியாக இருந்த காரணத்தால் வக்பு வாரிய உறுப்பினராகி தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்ட அன்வர் ராஜாவின் பதவிகாலம் மே 23-ம் தேதியுடன் முடிவடை ந்துள்ளதால், வக்பு வாரிய தலைவர் பதவியும் காலவதியாகி விடுகிறது. ஆகவே தற்போது உள்ள வக்பு வாரிய உறுப்பினர் அமைப்பை கலைத்து விட்டு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து, அதன் மூலம் வக்பு வாரிய தேர்தலை விரைந்து நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வகுப்பு வாரியத்திற்கு உள்ளது. வக்பு வாரியத்தின் பல சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கபளிகரம் செய்யப்பட்டு வருகிறது.  தற்போது தலைவர் இல்லாத நிலை நீடித்தால், ஆக்ரமிப்பாளர்கள் வக்பு வாரிய சொத்துக்களை எளிதாக ஆ க்ரமித்துவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆகவே வக்பு வாரியத்திற்கு தேர்தல் நடத்தி தலைவர் விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத்தலைவர் விஎம்எஸ். முஸ்தாபா அறிக்கையில் கூறியுள்ளார்.