சென்னை ஜூன் 17: ஆவடியில் ரூ.28 கோடி மதிப்பில் படகு சவ்வாரி உள்ளிட்ட வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ள பருத்திப்பட்டு ஏரி பொது மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.  அமைச்சர் பாண்டியராஜனின் முயற்சியால் 22 ஹெக்டர் பரப்பளவுக் கொண்ட பருத்திப்பட்டு ஏரியை சீரமைக்கும் பணியை 2016-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை தொடங்கியது.

சேத்துப்பட்டு ஏரியைப்போல் படகு சவாரி, கரையோரத்தில் நடைபயிற்சிக்கான இடம் விளையாட்டு மைதானம், திறந்த வெளி அரங்கம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. ஏரியின் கரைகள் வலுப்படுத்தப்பட்டு கரையேரத்தில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.  மார்ச் 31-ந் தேதி அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன.

இருப்பினும் 3 மாதங்களாக ஏரியை திறந்து வைக்காதது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அதிர்ப்தி தெரிவித்துள்ளன. ஏரியின் மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டு தண்ணீர் வரும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டிருக்கிறது. பருவமழை காலத்தில் இந்த ஏரிக்கு விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வரும். 21.5 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து ஆவடி சுற்றுப்புற பகுதிகளுக்கு சிறிய நீர் நிலைகளுக்கும் தண்ணீர் செல்லும்.

பறவைகள் சரணாலயமும் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், படகு போக்குவரத்தால் பறவைகளுக்கு இடையூறு ஏற்பட கூடும் என்று ஆவடி வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.