டான்டன், ஜூன் 17:  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய, விண்டீஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. இதில், விண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 3-வது ஓவரிலேயே டக்-அவுட் ஆகி நடையை கட்டினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில், ஜாசன் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ் அணியை, மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணி எதிர்கொள்கிறது. டாஸ் ஜெயித்த வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, விண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ்கெயில் 13 பந்துகள் விளையாடிய நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகி வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்.