கொலைகாரன் டீமுடன் மீண்டும் இணைந்த விஜய்ஆண்டனி

சினிமா

கொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் பிரபல ஃபைனான்சியர் கமல் போரா இணைந்து “இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்” என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். அவர்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.

தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் இணைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.