‘சிந்துபாத்’ டிரைலரில் கலக்கும் விஜய்சேதுபதி

சினிமா

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஐபிஎஸ் என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘சிந்துபாத்’. ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இதில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.

விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் முக்கியமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரவு படத்தின் டிரைலர் வெளியானது. இதில் தனக்கே உரிய பாணியில் நடித்து விஜய்சேதுபதி அசத்தி உள்ளார். இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது.