பெய்ஜிங், ஜூன் 18: சீனாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலியாகினர்.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 2-வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து, அலறியடித்தபடி வீதிகளுக்கு வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் காயம் அடைந்தனர்.