அமெரிக்காவில் ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் சாவு

உலகம்

அயோவா (அமெரிக்கா), ஜூன் 18:  அமெரிக்காவில் வெஸ்ட் டெஸ் மொயின்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் சுங்காரா என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்திருக்கிறார்.

சந்திரகேர் அங்குள்ள பொதுப் பாதுகாப்புப்பிரிவில் அந்நாட்டு அரசு ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவரது மனைவி லாவண்யா சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியிருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவருக்கு வயது 15, மற்றொருவருக்கு 10.

சந்திரசேகர் துப்பாக்கியால் மனைவி மற்றும் மகன்களை சுட்டுக் கொன்றிருக்கிறார். பிறகு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்திருக்கிறார். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. அமெரிக்க போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.