ஜனத்தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

உலகம்

நியூயார்க், ஜூன் 18:  இந்திய மக்கள்தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 770 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்து 970 கோடியாக இருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் 1,100 கோடியாக மக்கள்தொகை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.