சென்னை, ஜூன் 19: நடிகர் சங்க தேர்தலை நடத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அளித்த மனு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதால் நடிகர் சங்க தேர்தலை தற்போது நடத்துவது ஏற்புடையதாக இல்லை என்று அனைத்து சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் வரும் 23ந்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தற்போது நிர்வாகத்தில் உள்ள நாசர், விஷால் அணி போட்டியிடுகிறது. நடிகர் பாக்யராஜ் தலைமையில் எதிரணியினர் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த அணியில் ஐசரி கணேஷ், பிரசாந்த போன்றோர் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி அதன் செயலாளர் விஷால் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடைபெற உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் பக்கத்தில் குடியிருப்புகள் உள்ளதால், நடிகர்களை காண மக்கள¢வரும் போது தேவையற்ற பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படும் என்பதால் தேர்தலை அங்கு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்க முடியாதநிலை உள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர¢ வாதாடினார். இதையடுத்து எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த தடை விதித்தது.

இதற்கிடையே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால¢ புரோகித்தை சந்தித்துமுறையிட்டனர். கவர்னரை சந்தித்த விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பாக மனு அளித்திருப்பதாக கூறினர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.
வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு நடிகர் சங்கம் விளக்கம் அளித்தது. ஏற்கனவே அளித்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதை நடிகர் சங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தென¢சென்னை மாவட்ட பதிவாளர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது தொடர்பாக விசாரித்து உண்மை நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது . 2017-2018-ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்ட பதிவாளரின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது. எனவே எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தேர்தல¢நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த பின்னரும் சங்க நிர்வாகிகள் தேர்தல¢தொடர்பாக எடுத்த முடிவின் நிலைகுறித்தும் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. எனவே அனைத்து விவரங்கள் குறித்து தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க பதிவாளர் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலை நிறுத்த உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என பாண்டவர் அணி கூறியிருக்கிறது. எங்களது அணியின் வெற்றியை தடுப்பதே இந்த உத்தரவின் நோக்கம் என்று பாண்டவர் அணியைச் சேர்ந்த பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.