சென்னை,ஜூன் 19: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்ல உள்ளார். அங்கு நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதன் பின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 1 வார காலமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக கடந்த 1 வாரமாக முதல்வர் ஆலோசனை கூட்டம், அதிமுக நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. ஆயுர்வேத சிகிச்சை முடிந்த இன்று சென்னை திரும்பியுள்ள துணை முதல்வர், இன்று முதல் அரசு பணிகளை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக நாளை டெல்லியில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுநாள் வரை டெல்லியில் நடைபெற்று வந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று வந்த நிலையில், நிதியமைச்சராக உள்ள முதல் முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். அதற்காக இருவரிடமும் நேரம் ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அப்படி நேரம் ஒதுக்கும் பட்சத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. கடந்த 15 மற்றும் 16-ம் தேதி டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடதக்கது.

இதனிடையே இன்று பிரதமர் தலைமையில் ஒரே தேசம், ஒரே தேர்தல¢என்ற பொருளில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் சட்ட அமைச்சர¢ சி.வி.சண்முகம் கலந்து கொள்கிறார்.