சென்னை, ஜூன் 19: தொடர்ச்சியாக பெண்களை ஏமாற்றியதுடன், தற்போது 4-வது திருமணம் செய்யமுயன்ற நபர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.  சாலிகிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 41). இவர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்துவருகிறார். கடந்த 2012-ல் தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பரை திருமணம் செய்துக்கொண்டு வளசரவாக்கத்தில் வசித்துவந்துள்ளார்.

இவர்களிடையே நிலவிவந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தீபிகாவை விட்டு அஜித் பிரிந்துவாழ்ந்துவருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், மற்றொரு பெண்ணை அஜித் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தீபிகா தகவல் வரவே, அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், அஜித்துக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அஜித்தை போலீசார் கைது செய்தனர்.