சென்னை, ஜூன் 19:  கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகளின் சோதனையின் தொடர்ச்சியாக சென்னை புழல் சிறையில் உள்ள 3 கைதிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் சதி செய்தாரகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த படுகொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 மாதங்களாக தமிழகத்தில் சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே கோவையில் முகாமிட்டு தொடர் சோதனையிலும் ஈடுபட்டனர். முகம்மது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக ஐஎஸ் அமைப்புடன¢தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரையிலும் சோதனை நடத்தினார்கள்.

3-வது கட்டமாக தற்போது புழல் சிறையில் உள்ள கைதிகள் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக புழல் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.அத்வானியை கொலை செய்ய கோவையில் நடைபெற்ற சதி திட்டம், மதுரையில் பாலத்திற்கு அடியில் குண்டுவைத்த சம்பவம், தமிழகத்தில் இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் போலீஸ் பக்ருதீனுக்கும், அவனது கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இந்த வழக்குகளிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக 3 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இதனை தொடர்ந்தே 3 பயங்கரவாதிகளிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வருகிறார்களா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.