வேலூர், ஜூன் 19: வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கெங்காபுரம் கிராமபொது மக்கள் வேலூர் மாவட்ட கலெக்டரிடம் மூன்று கிராம பொதுமக்களுக்கு குடிநீர் கேட்டு மனு அளித்தனர்

அம்மனுவில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஊராட்சியின் மூலம் மின் மோட்டார் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் மின் மோட்டார் அமைக்க கூடாது என ஊராட்சி உதவியளாளரை பழனி மிரட்டுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று கிராம பொதுமக்களின் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர்.