புதுவை, ஜூன் 19: புதுச்சேரியில் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி முதல்வர் நாராயணசாமி தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தார். அதனைத்தொடர்ந்து 49 கிலோ கேக் வெட்டினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் ராகுல் காந்தியின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் பணி நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல் அமைச்சர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்து ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் 49 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கட்சி தொண்டர்களுக்கு விநியோகம் செய்தார்.