சென்னை, ஜூன் 19: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் போட்டியில் பங்கேற்கும் 8 அணி நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு ஆலோசித்தனர். அதன்படி, 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வீரர்கள் பரிமாற்றம் ஜூன் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையும், புதிய வீரர்கள் பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீரர்கள் பதிவுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.